19 Dec 2024

நேர்ந்து விட்ட நேரங்கள்

நேர்ந்து விட்ட நேரங்கள்

கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் போவதில்

அநியாயம் தெரியலாம்

மறுக்க முடியாமல் வாக்கைக் கொடுத்தது

அந்நேரத்து நியாயமாகவும் இருந்திருக்கலாம்

கொடுப்பதெல்லாம் பிடுங்குவதற்கே

இந்த நேரத்தைச் சந்தோசப்படுத்த

இன்னொரு நேரத்தைக் காயம் செய்ய வேண்டியிருக்கிறது

எல்லா நேரத்தையும் எல்லா நேரங்களிலும்

சந்தோசம் செய்ய முடியாது

சில நேரங்களில் சில நேரங்கள்

நேரங்களுக்குள் தர்ம சங்கடங்கள் இருக்கின்றன

நேரங்களுக்குத் துரோகச் சம்பவங்கள் இருக்கின்றன

நேரங்களுக்குள் எல்லாம் இருக்கின்றன

எதிர்பார்ப்பவை மட்டுமா

எதிர்பாராதவையும் கலந்து உறைந்து கிடக்கின்றன நேரங்கள்

அந்தந்த நேரத்தில் நிகழ்பவை

இந்த நேரத்தில் கணிக்க முடியாதவை

நேரத்தில் நேர்வதை எதிர்கொள்வதைத் தவிர

நேரத்துக்கு நேர்ந்து விட்ட மனிதா உனக்கென்ன

வேறு வழி இருக்கிறது

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...