எதிராக வாழ வைத்தல்!
எனக்கு
புத்திமதி சொல்லி விட்டு
நீங்கள்
மீறி செய்ய முடியாது
நான்
கஷ்டப்பட்டு இந்த மனநிலைக்கு வந்திருக்கிறேன்
நீங்களும்
அப்படித்தான் வர வேண்டி இருக்கும்
வாழ்க்கை
முழுவதும்
பிடித்ததையே
செய்து கொண்டிருக்க முடியாது
அதுவும்
ஒரு நாள் சலித்துப் போகும்
ஒரு
புதிய ஆசை தோன்றும் போது
விருப்பம்
மாறுபடும் போது
நம்
ஆசைகளை நிறைவேற்றி வைத்தவரே
நமக்கு
எதிரியாகிப் போவார்
என்ன
நடந்தாலும்
வாழ்க்கை
போய்க் கொண்டே இருக்கும்
எதிரியும்
இல்லை
நண்பரும்
இல்லை
எல்லாம்
தொடர்கதை
மாறி
மாறி நடக்கும் மர்மக் கதை
எல்லாரும்
இக்கட்டை
ஒரு
நாள் எதிர்கொண்டு ஆக வேண்டும்
விரும்பாவிட்டாலும்
சிக்காமல்
இருக்க முடியாது
சிக்கிக்
கொண்டு
மீண்டு
வர வேண்டும்
எதற்கும்
அவசரப்பட முடியாது
எல்லாவற்றுக்கும்
பொறுமையாகத்தான்
இருந்தாக
வேண்டும்
சரியாகச்
செய்யவில்லை என்று
குற்றம்
சாட்டுவார்கள்
அதற்காகச்
சரியாகச் செய்தால்
பாராட்டுவார்கள்
என்றில்லை
எதாவது
செய்தால்
குறை
காண்பார்கள்
அதற்காக
எதுவுமே செய்யாமல் இருந்தால்
கண்டு
கொள்ளவே மாட்டார்கள்
நான்
நினைப்பதற்கு எதிராக
என்னை
வாழ வைத்துப் பார்த்து விடுகிறீர்கள் இல்லையா
*****
No comments:
Post a Comment