18 Dec 2024

இப்படிக்கு முடியாது!

இப்படிக்கு முடியாது!

மாறுவதை மாற்ற முடியாது

உள்ளுணர்வை மீற முடியாது

தவறுகளை நியாயப்படுத்த முடியாது

அநாவசியமாக அடுத்தவர்களைக் குறை சொல்ல முடியாது

ரகசியங்களை யாரை நம்பியும் சொல்ல முடியாது

எல்லாரிடமிருந்தும் எல்லாவற்றையும் எதிர்பார்க்க முடியாது

நம் பிழைகளுக்கு அடுத்தவர்களைக் குறை சொல்ல முடியாது

தர்மசங்கடங்களைத் தவிர்க்கவும் முடியாது

தோல்விகளைக் கடக்காமல் வெற்றி பெற முடியாது

கோபத்தைக் கட்டுப்படுத்தாமல் பதவிகளில் நீடிக்க முடியாது

அதிகம் பேசினால் ஆபத்தில் சிக்காமல் இருக்க முடியாது

ஏமாற்றுபவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் கொடுக்க முடியாது

துரோகங்களை எதிர்கொள்வதற்காக நன்றி மறக்க முடியாது

என்றோ வரும் வாய்ப்புகளுக்காக வாழ்நாள் முழுவதும்

காத்துக் கொண்டிருக்க முடியாது

இறங்கி அடிக்க வேண்டிய இடத்தில்

தட்டித் தூக்க வேண்டிய இடத்தில்

அப்படி செய்யாமல் இலக்கை அடைய முடியாது

முடியாது முடியாது என்று நீண்ட நாட்கள் சொல்லிக் கொண்டிருக்கவும் முடியாது

அதற்காக முடியும் முடியும் என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கவும் முடியாது

முடிவதை முடியும் என்றும் முடியாததை முடியாது என்றும்

அழுத்தம் திருத்தமாய்ச் சொல்லாமல் நிம்மதியாக வாழவும் முடியாது

******

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...