எப்போது கரையைக் கடக்குமோ செய்திப் புயல்கள்?!
புயல்,
மழை,
வெள்ளம்
ஏற்படும் காலங்களில் பயப்படாமல் இருப்பது எப்படி?
என்னைக்
கேட்டால், தொலைக்காட்சியையும் அலைபேசியையும் அணைத்து விட்டால் எந்தப் பயமும் இருக்காது.
புயல்
ஏற்படுத்தும் அச்சத்தை விடவும், புயல் குறித்த முன்னெச்சரிக்கை செய்திகள் என்ற பெயரில்
தொலைக்காட்சிகள் தரும் செய்திகள் பேரச்சத்தை உருவாக்குகின்றன.
அதே
போல புயல் அங்கு வந்து கொண்டிருக்கிறது, இங்கு வந்து கொண்டிருக்கிறது, இந்த ஊரைச் சுற்றிக்
கொண்டிருக்கிறது, அந்த ஊரில் நிலை கொண்டிருக்கிறது என்று புலனத்தில் (வாட்ஸ்ஆப்) தரப்படும்
செய்திகள் பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.
புயல்,
மழை,
வெள்ளம்
குறித்த பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வோடு இருந்தாலே அது
பொதுமக்களுக்குப் போதுமானது.
அதற்கு
மேலும் அது குறித்த உடனடியான செய்திகளைத் தெரிந்து கொள்ள தொலைக்காட்சியை நாடுவதை விடவோ,
அலைபேசியை நாடுவதை விடவோ, வானொலியை நாடுவதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதிலும்
பண்பலை வானொலிகளைத் தவிர்த்து விடுவது பொருத்தமாக இருக்கும்.
புயல்
வரும்.
வராமல்
போகும்.
முதலில்
பரபரப்பைக் கிளப்பும் செய்தி ஊடகங்கள் அடங்க வேண்டும். அவை அடங்கினாலே மக்களுக்குப்
பயமும் பீதியும் அடங்கி விடும். புயலையும் மழையையும் வெள்ளத்தையும் மக்கள் சுலபமாக
எதிர்கொண்டு விடுவார்கள். பயத்தையும் பீதியையும் எதிர்கொள்வதே கடினமாக இருக்கிறது.
உண்மையில்
இங்கு மழை வெள்ளம் என்பதோ புயல் சீற்றம் என்பதோ மழையாலோ, புயலாலோ ஏற்படுவதில்லை. செய்திப்
புயல்களாலும், செய்தி சீற்றங்களாலும்தான் ஏற்படுகின்றன.
இந்தப்
பரபரப்புச் செய்திப் புயல்கள் கரையைக் கடந்து விட்டாலே மக்கள் பாதுகாப்பாக உணரத் தொடங்குவார்கள்.
*****
No comments:
Post a Comment