14 Dec 2024

இயற்கை உணவில் இன்னல்கள் இல்லை!

இயற்கை உணவில் இன்னல்கள் இல்லை!

மனித இனம் தோன்றி 26 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன.

விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டு பத்தாயிரம் ஆண்டுகள் ஆகின்றன.

பண்டைய மனிதனுக்கு சொத்தைப் பல் இல்லை.

புரதச் சத்து குறைபாடு இல்லை.

சர்க்கரை நோய் என்ற ஒன்று இல்லவே இல்லை.

கொழுப்பு நோய் இல்லை.

இரத்த அழுத்த நோய் இல்லை.

இரும்பு சத்து குறைபாடு இல்லை.

கால்சிய சத்து போன்ற சத்து குறைபாடுகள் இல்லவே இல்லை.

எல்லாம் சமைத்த உணவால் வந்த தொல்லை. துரித உணவுகள் அதை விட மாபெரும் தொல்லை.

இதிலிருந்து சொல்ல வருவது என்னவென்றால், மனிதன் இயற்கையான உணவை உண்ட காலம் வரை அவனுக்கு எந்த விதமான நோய்களும் உண்டாகவில்லை. எப்போது சமைத்து உண்ண ஆரம்பித்தானோ அப்போதிலிருந்தே நோய்கள் உண்டாகத் தொடங்கியிருக்கின்றன. இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று, அது என்னவென்றால், உடல் நலமும் நோயற்ற வாழ்வும் இயற்கையான உணவில்தான் அடங்கியிருக்கின்றன.

அதுவும், இப்போது பதப்படுத்தப்பட்ட உணவுகள் வந்த பிறகு பலவகையான, வாயில் நுழையாத அளவுக்குப் பெயர் சொல்ல முடியாத பல நோய்கள் வந்து விட்டன. அன்றிலிருந்து மனிதருக்குத் தோன்றிய வியாதிகள் உச்சத்தைத் தொட்டன.

சமையல் உணவை உண்பவர்கள் குறைந்தபட்சம் அப்போதே சமைத்து, அப்போதே உண்ணப் பழகுங்கள். குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உண்பதிலிருந்து முடிந்த வரை விலகுங்கள்.

முடிந்த வரை நீங்களே சமைத்து உண்ணுங்கள். அதற்காக அரை மணி நேரம் செலவழிப்பதை நேரம் வீணாவதாகக் கருதாதீர்கள். இயன்றவரை கடைகளில் உண்ணுவதைத் தவிருங்கள். அதிலும் அடுமனை (பேக்கரி) உணவுகளை அதிகபட்சம் தவிர்க்கப் பாருங்கள். பிறகு உங்கள் உடல் நலம் எப்படி இருக்கிறது என்பதை நீங்களே கூறுங்கள்.

என்றோ ஒரு நாள் அல்லது சில நாட்கள் ஆசைக்காக எண்ணெயில் பொரித்த பதார்த்தங்களை உண்ணுவது என்பது வேறு. அதையே ஒவ்வொரு நாளும் வாடிக்கையாக உண்ணுவது என்பது வேறு. எண்ணெய் பதார்த்ததங்களை வாடிக்கையாக உண்ணுவது என்பது உடலுக்கு ஊறு.

நீங்கள் வாரத்தில் ஏழு நாட்களும் சமையல் உணவை உண்பவராக இருந்தால் வாரத்தில் ஒரு நாளாவது பழ உணவை உண்ணுங்கள். அல்லது ஒரு நாளில் ஒரு வேளையாவது பழ உணவை எடுத்துக் கொள்ள ஏற்பாடு பண்ணுங்கள்.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...