13 Dec 2024

எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்குவதுதான் வளர்ச்சியா?

எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்குவதுதான் வளர்ச்சியா?

இது என்னடா காலம் என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா!

முன்பெல்லாம் வீடு, வாசல் இல்லையென்றாலும் சத்திரங்கள் இருந்தன. வாய்ப்பில்லாதவர்கள், வசதியில்லாதவர்கள் அங்கு தங்கிக் கொண்டார்கள்.

இப்போது ஒரு சதுர அடி நிலத்தை ஆயிரக்கணக்கில் பேரம் பேசி வாங்கிக் கொண்டிருக்கிறோம். அப்படியான அன்ன சத்திரங்களை இப்படியான விலை போகும் காலங்களில் யார் உருவாக்கப் போகிறார்கள்?

தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுப்பது பெரும் புண்ணியம்.

ஆனால், தண்ணீரை காசு கொடுத்து வாங்குகிறோம்.

இதற்கு யோசித்துக் கொண்டுதான் இப்போதெல்லாம் யாரும் தண்ணீர் பந்தல் வைப்பதில்லை போலும். மோர்பந்தல் கூட வைக்கிறார்கள். நீர்ப்பந்தல் வைப்பதில்லை.

ஐயா! தாகம் என்று கத்தினாலும் கதறினாலும், பெட்டிக்கடையில் தண்ணீர் பாட்டில் இருக்கிறது, வாங்கிக் குடி என்று அலட்சியமாகச் சொல்லி விட்டு நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

நிலத்தை விற்றார்கள். நீரை விற்றார்கள். அடுத்தது என்ன? இப்போது காற்றையும் விற்க ஆரம்பித்து விட்டார்கள்.

பெருநகரங்களில் காற்றையும் காசு கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியே போனால்…

இன்னும் எதை எதையெல்லாம் விற்கப் போகிறார்களோ?

நாமும் இன்னும் எதை எதையெல்லாம் காசு கொடுத்து வாங்கப் போகிறோமோ?

இயற்கையாக இலவசமாகக் கிடைத்த எல்லாவற்றையும் அழித்து விட்டு, பிறகு அவற்றைக் காசு கொடுத்து வாங்குவதுதான் வளர்ச்சியா? அல்லது அதுதான் முன்னேற்றமா?

எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்கி விடத்தான் முடியுமா?

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...