புறக்கணிப்பு
அன்பே
என்பார் ஆருயிரே என்பார்
பிராணநாதம்
என்பார் பொன்வசந்தம் என்பார்
நீயின்றேல்
நானில்லை என்பார்
உயிர்
என்பார் சுவாசக் காற்று என்பார்
நீ இல்லாத
வாழ்வு ஒரு வாழ்வா என்பார்
கல்லறையிலும்
உன்னருகே இடம் வேண்டும் என்பார்
வாழ்க்கையில்
ஜோடியாக இருப்பதன் சிரமம்
சொல்லி
மாளுமோ
ஒரு
செருப்பைத் தூக்கிப் போட
அது
தேய்ந்திருக்க வேண்டாம் பிய்ந்திருக்க வேண்டாம்
இன்னொரு
செருப்பு
அறுபட்டாலே
போதும்
*****
No comments:
Post a Comment