பத்து நிமிடங்களில் பட்டை நாமம்!
இந்த
மழைக் காலத்தை எப்படி சமாளிக்கப் போகிறோமோ?
வானிலை
ஆய்வாளர்களின் எண்ணிக்கை
அதிகரித்துக்
கொண்டே போகிறது!
பாவம்
இந்த வானிலை
எப்படி
சமாளிக்கப் போகிறது?
***
தமிழ்நாட்டு
தொலைக்காட்சிகளுக்கென
ஒரு
கலாச்சாரம் இருக்கிறது!
சொன்ன
செய்தியையே
இரண்டு
முறை சொன்னால்
சில
முறை முன்று முறை
நான்கு
முறை
ஐந்து
முறை என்று
பல முறை
சொன்னால்
அதுதான்
பிரேக்கிங் நியூஸ்!
அதற்குதான்
கிடைக்கிறது
பல ஆயிரம்
வியூஸ்!
****
இணையத்தில்
மேய்ந்த போது
பத்தாயிரம்
மதிப்புள்ள தொலைக்காட்சி
ஆயிரம்
ரூபாய் என்று அறிவிப்பு சொன்னது!
அத்துடன்
பட்டென
பத்து
நிமிடம் மட்டும் இந்தச் சலுகை என்றது!
ஆயிரம்
ரூபாய்க்கு இணைய வழி பரிவர்த்தனையை
முடித்து
விட்டுப் பார்த்த போது
பட்டை
நாமம் போட்டு விட்டுப் போனது புரிய
பத்து
நிமிடங்கள் ஆனது
*****
No comments:
Post a Comment