அங்கே நிறுத்துவதற்கு ஏதுமில்லை!
தவறுகள்
ஒரு போதும் எதற்கும் தடையாக இருக்காது
தவறாகப்
போனாலும் திருத்திக் கொண்டு தொடருங்கள்
பயங்கள்
தடையாக இருக்கும்
தடைக்கல்லாக
விஸ்வரூபம் எடுக்கும்
பயங்களைப்
பார்த்து பயப்படாதீர்கள்
பயங்களோடு
தொடர்ந்து செல்லுங்கள்
தொடர்ந்து
செல்ல செல்ல
பயங்கள்
உங்களை அறியாமல் விலகும்
தவறுகளைப்
பொருட்படுத்தாது
பயங்களை
அறியாது நடக்கையில்
உங்களைத்
தடுத்து நிறுத்த யாராலும் இயலாது
உங்களைத்
தடுத்து நிறுத்தும் ஒரே விசயம்
அப்போது
நீங்கள்தான்
உங்களைத்
தடுக்காதீர்கள்
உங்களை
எதற்காகவும் நிறுத்தாதீர்கள்
தொடர்ந்து
செல்லுங்கள்
உங்கள்
தவறுகள் சரியாகும்
உங்கள்
பயங்கள் காணாமல் போகும்
உங்களை
அப்போது உங்களாலும் தடுத்து நிறுத்த முடியாது
அங்கே
நிறுத்துவதற்கு ஏதுமில்லை
******
No comments:
Post a Comment