6 Dec 2024

வெற்றியின் பின்னே ஊடாடும் கதைகள்!

வெற்றியின் பின்னே ஊடாடும் கதைகள்!

வாழ்வையே தியாகம் செய்து

அறிந்து கொண்டதை

மற்றவர்கள் மறுக்கிறார்கள் என்பதற்காக விட்டு விட முடியாது

தவறான பாதையில் சென்றால் சுட்டிக் காட்டலாம்

செல்வதையே தவறு என்று மட்டம் தட்டலாகாது

இப்போது தோற்றேன் என்றாலும் சிரிப்பார்கள்

சில நாட்கள் கழித்து தோற்றேன் என்றாலும் சிரிப்பார்கள்

சில வருடங்கள் கழித்து தோற்றேன் என்றாலும் சிரிப்பார்கள்

தோற்றேன் என்பதை எப்போதும் சொன்னாலும் சிரிப்பார்கள்

தோற்றேன் என்பதை வென்றேன் என்று மாற்றினால் அன்றி

அவர்கள் சிரிப்பதை நிறுத்த மாட்டார்கள்

அவர்கள் சிரிக்கிறார்கள் என்பதற்காக மட்டுமல்ல

என்னைப் பார்த்து எனக்கு நானே சிரித்துக் கொள்ளக் கூடாது

என்பதற்காகவும் வெற்றி பெற்றுதான் ஆக வேண்டும்

வெற்றியை எல்லார் முன்னும் வீசி எறியும் போது

விதவிதமான கதைகளை இட்டு கட்டி சொல்வார்கள்

அந்த வெற்றியின் முடிவில் நான் என்னைப் பார்த்தும்

இந்த உலகைப் பார்த்தும் சிரிப்பேன்

இதுவும் ஒரு விளையாட்டுதான் என்று கூறுவேன்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...