கனவுகளை நோக்கி நடத்தல்
கனவு
என்பது நிகழ்காலம் அல்ல
எதிர்காலம்.
எதிர்காலத்திற்காக
நிறைய இழக்க வேண்டும்.
நிகழ்காலத்தையே
இழக்க வேண்டும்.
நம்மால்
சமாளிக்க முடியவில்லை
என்று
நினைக்கலாம்.
காலம்
நமக்காகச் சமாளித்துக் கொண்டிருக்கும்.
காலம்
நமக்காகச்
சமாளித்துக்
கொடுக்கும்.
கனவுகளுக்கு
யாரும் துணையில்லை என்று
நினைக்க
வேண்டாம்.
காலமே
துணை!
காலத்தில்
பின்னோக்கிச் செல்ல முடியாது.
முன்னோக்கி
எப்படி வேண்டுமானாலும் செல்லலாம்.
கனவுகளை
நோக்கியோ கனவுகளை நோக்காமலோ
எப்படி
வேண்டுமானாலும் செல்லலாம்.
எப்படி
சென்றாலும் காலம் கடந்து கொண்டே இருக்கும்.
கனவுகளை
நோக்கி முன்னோக்கிச் செல்லும் போது,
காலம்
ஒரு நாள் அந்தத் திசையில் திரும்பும்.
காலம்
திரும்பும் திசை
கண்ணுக்குத்
தெரியவில்லை என்பதற்காக
கனவுகளை
நோக்கி நடக்காமல் இருந்து விட வேண்டாம்.
*****
No comments:
Post a Comment