4 Dec 2024

தோற்கும் ஒரு புள்ளியில் ஜெயிப்பாய்!

தோற்கும் ஒரு புள்ளியில் ஜெயிப்பாய்!

கடுமையாக உழைப்பதுதான்

வாழ்வை மாற்றும் என்றால்

கழுதைகளின் வாழ்க்கை

ஏன் இன்னும் மாறாமல் இருக்கிறது?

வேகமாக ஓடுவதுதான் வெற்றி என்றால்

குதிரைகளின் வெற்றி

எப்படி தோற்கடிக்கப்பட்டது?

இன்னும் இன்னும் உயரே செல்வதுதான்

சாதனை என்றால்

பறவைகளின் சாதனை என்னவாயிற்று?

சாகும் வரை வளர்ந்து கொண்டிருப்பதுதான்

வாழ்க்கை என்றால்

தாவரங்களின் வாழ்க்கை என்னவாயிற்று?

யாரையோ பார்த்து எதையோ பார்த்து

கற்றுக் கொள்வதுதான் கல்வி என்றால்

நகலெடுக்கும் இயந்திரங்கள் ஏன்

நல்ல கல்வியாளர்களாக ஆகாமல் போயிற்று?

ஜெயிப்பதற்காக அழைத்துச் செல்லப்படும்

ஒரு புள்ளியில் நீ தோற்பாய்.

அந்தப் புள்ளியை நெருங்கும் வரை

நீ யாரோவாக வாழ்கிறாய்.

அந்தப் புள்ளியைக் கடந்ததற்குப் பிறகு

வாழ்வதற்காக மட்டுமே வாழ்வாய்.

உன்னால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இருக்காது.

உன்னால் உனக்கும் எந்தப் பிரச்சனையும் இருக்காது.

எல்லா வினாக்களுகும் அங்கே உதிர்ந்திருக்கும்.

எந்தப் பதில்களுக்கும் அங்கே தேவையிருக்காது.

எந்தக் கருத்துகளுக்கும் அங்கே வேலையிருக்காது.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...