3 Dec 2024

ஒவ்வொரு நாய்க்கும் ஒரு கல்

பிரார்த்தனை

இன்றைக்கு எதுமில்லை

தேடி வந்து நாயே ஓடிப் போ

இன்று போய் நாளை வா

நாளை இல்லையென்றால் மறுநாள் வா

வராமல் இருந்து விடாதே

கைக்கு எது எப்போது கிடைக்கும் என்று

யாருக்கு என்ன தெரியும்

இப்போது ஒரு கல் கிடைத்திருக்கிறது

உன்னை நோக்கித் தூக்கி எறிகிறேன்

அதை எடுத்துக் கொள்வதற்கு மனமில்லாது

பயந்து ஓடுகிறாய்

ஒரு ரொட்டித் துண்டு கிடைக்கும் போது

உன்னைத் தேடி வருகிறேன்

நீ வேறு யாரையும் தேடிப் போகாமல் இருக்க வேண்டும்

என்ற பிரார்த்தனையோடு

*****

No comments:

Post a Comment

மழைநீர் சேமிப்பைப் போற்றுதும்!

மழைநீர் சேமிப்பைப் போற்றுதும்! கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை விட மழைநீரைச் சேமிக்கும் திட்டம் ஓர் அருமையான திட்டமாகும். இயற்கை மழை...