9 Nov 2024

தமிழ்ப் படங்கள் எப்போது தமிழ் பேசும்?

தமிழ்ப் படங்கள் எப்போது தமிழ் பேசும்?

தமிழில் பெயர்கள் கிடைக்காத போது

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் என்ன செய்வார்கள்

தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்று

படத்திற்குப் பெயர் வைப்பார்கள்

குட் பேட் அக்லி என்பார்கள்

தக் லைப் என்பார்கள்

ப்ளாக் என்பார்கள்

கடைசியில்

ப்ளெடி பெக்கர் என்பார்கள்

***

இந்தப் படங்களில் நடிக்க

மனிதர்கள் எதற்கு

பொம்மைகள் போதும்

என்ன அழகாக நடித்து விடுகின்றன

பொருட்களை வீணாக்காமல்

சண்டையென்றால் பேரழிவை உருவாக்காமல்

பிரமாண்டம் என்ற பெயரில் பொருட்செலவில்லாமல்

பொம்மைப் படங்கள் அவ்வளவு ஆதர்சம்

இன்னொன்றைக் கவனித்தீர்களா

ஹாலிவுட் படங்களுக்கு

என்ன அழகாகத் தமிழ்ப் பெயர் வைக்கிறார்கள்

என்ன அழகாகத் தமிழ் வசனம் பேசுகிறார்கள்

தமிழ்ப் படங்களுக்கு அப்படியெல்லாம்

எப்போது பெயர் வைப்பார்கள்

தமிழ்ப் படங்களில் அப்படியெல்லாம்

எப்போது வசனம் பேசுவார்கள்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...