10 Nov 2024

உன்னால் நீ வழிநடத்தப்படுவாய்!

உன்னால் நீ வழிநடத்தப்படுவாய்!

நான் யோசித்துக் கொண்டே போகிறேன்

ஒன்றும் அவசரமில்லை

எடுத்துக் கொள்ள காலம்

அள்ளிக் கொள்ள யோசனைகள்

பொறுமையாகப் போவதால்

பாதைக்கு வலிக்கப் போவதில்லை

நிதானமாக நடைபோடுவதால்

யாருக்கும் எந்த நட்டமுமில்லை

நான் எதை நாயகமாக நினைக்கிறேனோ

அதுவே என்னை வழிநடத்துகிறது

அது புன்முறுவல் பூத்து

மெதுவாகப் போகச் சொல்கிறது

அவசரப்படுவதால் ஆவது ஒன்றுமில்லை என்கிறது

அதிகபட்சமாக எதிரிகளால் செய்ய முடிவதெல்லாம்

மன உறுதியைக் குழைப்பதுதான் என்கிறது

மனஉறுதி குழையாத வரை

மனஉறுதி எனும் நாயகத்தால்

உன்னை அறியாமல் நீ

வழிநடத்தப்படுவாய் என்கிறது

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...