30 Nov 2024

மகிழ்ச்சி எனும் மந்திரம்

மகிழ்ச்சி எனும் மந்திரம்

இந்த உலகில் எவ்வளவோ புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது

எல்லாவற்றையும் புரிய வைக்க

அன்பே நீ என்னுடன் இருப்பாயா?

உன்னால் மட்டுமே

ஆம் உன்னால் மட்டுமே

எனக்குப் புரியும்படி புரிய வைக்க முடியும்.

உன்னைப் பார்த்த போதே தோன்றியது

நான் ஏன் தனியாக இருக்க வேண்டும் என்று.

இனிமேல் நான் ஏன் வாழ்வைப் புரிந்து கொள்ளாமல்

எதற்குக் குழப்பிக் கொள்ள வேண்டும்?

வாழ்வில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

எது வேண்டுமானாலும் நடக்கட்டுமே.

நான் எனக்குப் பிடித்த உன்னோடு இருப்பேன்.

உன்னுடனான என் வாழ்வை மட்டும் வாழ்வேன்.

இதை காதல் என்பதா?

விதியின் ஏற்பாடு என்பதா?

என்னை அறியாத என் தேர்ந்தெடுப்பு என்பதா?

எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்

இணையும் கரங்கள் புனையும் வாழ்வை

இந்த உலகம் காணட்டும்

மகிழ்ச்சி என்பதற்கு இணையான மந்திரம் எதுவென்று!

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...