29 Nov 2024

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் அவராக இருப்பது

அவருக்குப்பிடிக்கும்

நீங்கள் அவர்களாக இருப்பது

அவர்களுக்குப் பிடிக்கும்

நீங்கள் மற்றவர்களாக இருப்பது

மற்றவர்களுக்குப் பிடிக்கும்

நீங்கள் யார் யாரோவாக இருப்பது

யார் யாருக்கோ பிடிக்கும்

யார் யாருக்குப் பிடிப்பது

உங்களுக்கும் பிடிக்கும்

நீங்கள் நீங்களாக இருப்பது

யாருக்கும் பிடிக்காது

நீங்கள் நீங்களாக இருப்பது

உங்களுக்கும் பிடிக்காது

நீங்கள் பயப்படலாம்

நீங்கள் அதிர்ச்சிகளைச் சந்திக்கலாம்

உங்களை நீங்களே புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கலாம்

நீங்கள் நீங்களாக இருப்பதை

நீங்கள் விரும்பத் தொடங்கி விட்டால்

நீங்கள் நீங்களாக இருப்பதை

யாரும் தடுக்க முடியாது

நீங்கள் நீங்களாக இருக்கும் போது

நீங்கள் மகத்தானவராக இருப்பீர்கள்

நீங்கள் நீங்களாக இருக்கும் போது

நீங்கள் ஒரு மகத்தான சக்தி

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...