27 Nov 2024

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக…

ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது

பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார்

தாக்குதலுக்கு முன்பாக

பலவீனத்தைக் கண்டறியும் வரை

பொறுமையாக இருக்க வேண்டும்

எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்பது பொருத்தமற்றது

பலவீனத்தைக் கண்டறியும் வரை

தாக்காமல் இருப்பது நல்லது

வீரத்தோடு போரிடுவது மரணத்துக்கு அழைத்துச் செல்லலாம்

பலவீனத்தைக் கண்டறிந்து விட்டால்

போரிடாமலே நீங்கள் வெற்றியை நோக்கிச் செல்லலாம்

நீங்கள் எதிர் வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம்

சக்தி வாய்ந்த வாசகங்களைப் பேசி

வசியம் செய்ய முயற்சிக்க வேண்டாம்

பலவீனத்தில் ஓர் அடி ஒரே ஓர் அடி அது போதும்

பிறகு பாருங்கள்

உங்கள் சாதாரண சொற்களுக்குக் கிடைக்கும் சக்தியை

உங்கள் எதார்த்த அசைவுகளுக்குக் கிடைக்கும் பெருமதிப்பை

நீங்கள் அப்போது நாயகர்களாகக் கொண்டாடப்படுவீர்கள்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...