மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!
மோசடி
பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது.
மோசடி
பேர்வழிகள் நம்ப வைத்து கழுத்தை அறுக்கிறார்கள்.
நலம்
விரும்பிகள் நம்பிக்கை வைக்குமாறு சொல்லி கழுத்தை அறுக்கிறார்கள்.
முதலில்
இந்த மோசடிப் பேர்வழிகள் குறித்த ஒரு செய்தி ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.
மோசடி
பேர்வழிகளின்
ஸ்டேட்
பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கணக்குகள் 40000,
பஞ்சாப்
நேஷனல் வங்கிக் கணக்குகள் 10000,
கனரா
வங்கிக் கணக்குகள் 7000,
தனியார்
வங்கிக் கணக்குகள் 11000
கண்டறியப்பட்டு
முடக்கப்பட்டிருக்கின்றன
அடேய்
நாங்கள் எல்லாம் இந்த வங்கிகளில்
நேர்மையான
ஒரு கணக்கு தொடங்குவதற்குள்
படாத
பாடு பட வேண்டியிருக்கிறது.
மோசடி
பேர்வழிகளே!
நீங்கள்
எல்லாம் இத்தனை கணக்குகள் எப்படி தொடங்கினீர்கள்?
என்று
கேட்கத் தோன்றுகிறதா?
நேர்மை
மெதுவாக, சவ சவ என்றுதான் வேலைசெய்யும் போலிருக்கிறது.
இப்போது
பெண்களின் நலம் விரும்பிகளாகச் செயல்படுகிறார்களே அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் அவதிகளைப்
பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த
நலம் விரும்பிகள் இல்லாவிட்டால்,
அரச
மரத்தை சுற்ற வேண்டியதில்லை
ஆயிரத்தொரு
விளக்குகள் ஏற்ற வேண்டியதில்லை
மார்கழி
விரதம் வேண்டியதில்லை
கோயில்களுக்குப்
பரிகார பூஜைகள் வேண்டியதில்லை
தனக்கான
கண்ணன் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி
பெண்களால்
இப்போது எப்படி இருக்க முடிகிறதோ
அப்படியே
இருக்க முடிவது ஒன்றே போதும்
பெண்களுக்கு
நீங்கள் பாதுகாப்பு தருவது இருக்கட்டும்
அவர்களை
முதலில் சுதந்திரமாக இருக்க விடுங்கள்!
இந்தக்
காலத்தில் ஒரு மனிதர் மோசடி பேர்வழிகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்வதைப் போல நலம்
விரும்பிகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
எத்தனை
பேரிடமிருந்துதான் ஒரு மனிதர் தன்னைக் காத்துக் கொண்டே இருப்பார் சொல்லுங்கள்.
இப்போது
சொல்லுங்கள்! நம்பிக்கை துரோகம் ஒரு மனிதரை எப்படிக் கொல்கிறது என்பது உங்களுக்குப்
புரிகிறதா?
*****
No comments:
Post a Comment