ஆசைகளை அரித்த கறையான்
சிறுக
சிறுக சேர்த்த பணம்
ஒவ்வொரு
நாளாய்ச் சேர்த்த பணம்
வாயைக்
கட்டி வயிற்றைக் கட்டி
மிச்சப்படுத்திச்
சேர்த்த பணம்
டீ குடிக்காமல்
காப்பி குடிக்காமல் சேர்த்த பணம்
பத்து
ரூபாய் பொருளை
ஒன்பது
ரூபாய்க்குப் பேரம் பேசி
ஒவ்வொரு
ரூபாயாகச் சேர்த்த பணம்
கூத்து
கொண்டாட்டம் குடி எல்லாம்
விட்டு
விட்டு விடாப் பிடியாகச் சேர்த்த பணம்
சின்ன
சின்ன ஆசைகளை நிராகரித்து
சின்ன
சின்ன சந்தோசங்களை விட்டுத் தள்ளி
உண்டியலில்
சேர்த்த பணத்தை
கறையான்
தின்று விட்டது
பணம்
சேர்க்கும் ஆசை மரித்து விட்டது
போதி
மரத்துப் புத்தரின் ஆசைகளை அரித்த கறையான்
அநேகமாக
இதுவாகவும் இருக்கலாம்
*****
No comments:
Post a Comment