24 Nov 2024

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்

என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன

பெருங்கூட்டத்தை விஞ்சும் ஆசை

முண்டியடித்து முதல்வராக வேண்டும் என்கிற பெரு விருப்பம்

வரிசை முறையைப் புறக்கணிக்கிறது

நெறிமுறைகளைக் காற்றில் பறக்க விடுகிறது

மக்கள் திமிரி அடித்துக் கொள்கிறார்கள்

உணர்ச்சிப் பிரவாகத்தில் இருக்கும் மக்களால் காத்திருக்க முடியாது

பெருங்கூட்டத்தை வழிநடத்துவது சாமானியமல்ல

பெருங்கூட்டத்தில் நகர்வதையோ போவதையோ

யாரும் திட்டமிட வேண்டியதில்லை

அவர்களே நகர்த்துவார்கள்

அவர்களே கொண்டு செல்வார்கள்

எங்கு செல்ல வேண்டுமோ அங்கு நீங்கள் சென்றிருப்பீர்கள்

எங்கு வர வேண்டுமோ அங்கு நீங்கள் வந்திருப்பீர்கள்

இலக்குகளும் திட்டங்களும் அங்கே பொடி பொடியாகும்

நோக்கங்கள் நொந்து போகும்

சில நேரங்களில் நெரிசல்களில் சில உயிர்களும் போகும்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...