23 Nov 2024

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

ஆயிரக்கணக்கான விதைகளை

அனுப்பிக் கொண்டிருக்கும் மரம்

அத்தனை விதைகளும்

முளைக்க வேண்டும் என்றா ஆசைப்படுகிறது

சாக்கடை நீரிலும் செடி முளைக்கும் போது

முடியாது என்றாலும் முயன்றால் வெற்றி கிடைக்கும்.

அதிக பயிற்சி மற்றும் முயற்சியின் போது

சலிப்படையலாம் சோர்வடையலாம் விரக்தியடையலாம்

வெற்றியை விட முக்கியமானது

சலிப்படையாமல் இருப்பது விரக்தியடையாமல் இருப்பது

மற்றும் சோர்வடையாமல் இருப்பது

எப்போதும் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்

நீங்கள் மரங்களை வளர்க்க வேண்டாம்

காடுகளை எதுவும் செய்யாமல் இருந்தால் போதும்

உங்கள் நம்பிக்கைக்கும் உற்சாகத்துக்கும்

நீங்கள் அதையே செய்தால் போதும்

இப்போது குப்பைகள் பெருகி விட்டன

இந்தக் குப்பைகளை ஒழித்து கட்டுவது

பெரிய வேலை என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்

சில நாட்களில் சில வாரங்களில் சில மாதங்களில்

அனைத்துக் குப்பைகளும் மக்கி விடும்

உங்கள் பிரச்சனைகளும் சிக்கல்களும் கஷ்டங்களும் அப்படியே

இப்போது இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள்

மற்ற மிருகங்களை விட

மனித மிருகம் ஆபத்தாக இருப்பதற்குக் காரணம்

மற்ற மிருகங்களுக்கு ஆசைகள் இல்லை

மனித மிருகத்துக்கு அது அதிகமாகவே இருக்கிறது

இப்போது உங்களுக்குப் புரிந்ததா

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...