12 Nov 2024

தற்கொலைக்குத் தயாராக்கப்படும் மாவீரன்!

தற்கொலைக்குத் தயாராக்கப்படும் மாவீரன்!

துப்பாக்கிப் பிடிப்பதினும் முக்கியம்

உன்னை நீயே சுட்டுக் கொள்ளாமல் இருக்க வேண்டும்

பறவைகள் தாக்காது என தப்புக் கணக்கு போடக் கூடாது

கண்கொத்திப் பறவைகள் கொத்தி விட்டால்

குறி பார்க்க கண்கள் இருக்காது

வீரத்தைச் சாய்க்க வீரமே வராது

தந்திரங்கள் கோழைத்தனத்தோடு பின்தொடர்ந்து வருகையில்

யோசிப்பதற்கோ முடிவெடுப்பதற்கோ

நேரமில்லாத பொழுதில் நீ சுட்டுப் பொசுக்கப்படலாம்

வீரத்தை வெளிக்காட்டாமல் இருப்பதே வீரம் என்பது

இப்போது புரிகிறதா உனக்கு

மாவீரத்தைச் சாய்ப்பதற்கான

மாபெரும் தந்திரங்கள் முளை விட்டுக் கொண்டே இருக்கின்றன

இந்தப் பூவுலகில்

இது எதுவும் தெரியாதது போல

சுற்றிக் கொண்டிருக்கும் இந்தப் பூமிக்கு எல்லாமும் தெரியும்

மாவீரனைத் தற்கொலைக்குத் தூண்டுவது ஒன்றும் புதியதன்று

*****

 

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...