7 Nov 2024

எங்கே போய் நிறுத்துகிறது தெரியுமா இந்த போலித்தனம்?

எங்கே போய் நிறுத்துகிறது தெரியுமா இந்த போலித்தனம்?

யோசித்துப் பார்த்தால் வாழ்க்கையில் ஓர் அசல், ஒரு நேர்மை தேவைப்படுகிறது. இவை இரண்டும் கை தூக்கி விடுமா என்ற பயமும் இருக்கிறது. இந்தப் பயம்தான் போலித்தனங்களை உருவாக்குகிறது.

அசலும் நேர்மையும் அப்பட்டமாக இருந்தால்தானே பிரச்சனை. அப்படி இருப்பது போலச் செய்து கொள்ளலாம் என்று நினைக்கும் போது போலித்தனங்களின் எண்ணிக்கை அதிகமாகி விடுகின்றன.

போலித்தனம் நடிப்பைத் தருகிறது. இந்த நடிப்பு எல்லாவற்றிலும் பிரதிபலிக்கிறது. எழுத்திலும் பிரதிபலிக்கிறது. அப்படிப் பிரதிபலிக்கும் போது அது போலித்தனமான எழுத்தாக, மலினமான எழுத்தாக மாறி விடுகிறது. இன்று உருவாக்கப்படும் வெகுஜன எழுத்து என்பதும் ஒரு போலித்தனமான எழுத்துதான்.

வெகுஜனம் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று ஓர் எழுத்தை உருவாக்கி அதை நிலைநிறுத்துகிறார்கள். எப்படி? விளம்பரங்கள் மூலமாக, வியாபாரத் தந்திரங்கள் மூலமாக, உணர்வுகளைச் சுண்டி விடுவதன் மூலமாக.

ஏன் இப்படி போலித்தனமாக இருக்க வேண்டும் என்ற கேள்வியை உங்களுக்குள் நீங்கள் எழுப்பிப் பார்க்க வேண்டும்? கார்ப்பரேட் சாமியார்களை வளர்க்கவா? அல்லது உங்களுக்கு நீங்களே அந்நியமாகிக் கொள்ளவா? அல்லது மது, போதை என்று உங்களை நீங்களே அடிமையாக்கிக் கொள்ளவா? முடிவில் போலித்தனம் அங்குதான் போய் நிற்கிறது.

*****

No comments:

Post a Comment

எங்கே போய் நிறுத்துகிறது தெரியுமா இந்த போலித்தனம்?

எங்கே போய் நிறுத்துகிறது தெரியுமா இந்த போலித்தனம்? யோசித்துப் பார்த்தால் வாழ்க்கையில் ஓர் அசல், ஒரு நேர்மை தேவைப்படுகிறது. இவை இரண்டும் கை...