வாழ்க்கை எனும் சுண்டி விடப்படும் நாணயம்
நடக்கிறது
நடக்கவில்லை
மென்மையாக
இருங்கள்
தோல்வியில்
முடிவதற்காகக் கடினமாகி விடாதீர்கள்
வெற்றியைப்
போல தோல்வி ஒரு நிகழ்வு
தோல்வியைப்
போல வெற்றி ஒரு நிகழ்வு
நிகழ்தலில்
எது வேண்டுமானால் நிகழட்டும்
பூவா
தலையா எது வேண்டுமென
யார்
நிர்ணயிக்க முடியும்
நிர்ணயிக்க
முடியாத ஒன்றுக்காக
சுண்டி
விடுதலை நிறுத்த முடியாது
வாழ்க்கை
சுண்டி விடப்படும் நாணயம்
எது
வேண்டுமானாலும் விழலாம்
விழுந்து
விட்டுப் போகட்டும்
நாணயத்திற்கு
ஆகப் போவதென்ன
இரண்டு
பக்கங்களும் உள்ள நாணயத்தில்
ஏன்
ஒற்றைப் பக்கத்தை எதிர்பார்க்கிறீர்கள்
*****
No comments:
Post a Comment