4 Oct 2024

எங்களுக்குத் தெரிந்ததெல்லாம்…

எங்களுக்குத் தெரிந்ததெல்லாம்…

வயிற்றெரிச்சல் இருக்கத்தான் செய்யும்

நகைகள் பணம் சொத்துகள் எல்லாம் இழந்தோம்

சரியாகப் பேசத் தெரியாத காரணத்தால்

வக்காலத்து வைத்து அதற்கும் இழந்தோம்

யாராலும் எதுவும் செய்ய முடியாதது போல

விதியின் வலிய கிரகங்கள் சுழன்றன

எங்களால் முடிந்ததெல்லாம்

இழப்பை முடியும் வரை ஏற்றுக் கொள்வதுதான்

அவர்களால் இயலும் வரை

செல்வத்தைக் கொள்ளையடிக்க அனுமதிப்பதுதான்

அவர்கள் மோசமானவர்கள் என்பது மட்டுமல்ல

மனிதக்கறி தின்பதற்கும் பிரியமானவர்கள்

எங்களால் எதையும் செய்ய முடியவில்லை என்று

நினைத்து விடாதீர்கள்

எங்களை எதுவும் செய்ய முடியாத அளவுக்கு

முடக்கியிருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்

அது மட்டுமல்ல

ஒரு நாள் விதியின் கிரகங்கள் மாறிச் சுழலும்

என்பதும் எங்களுக்குத் தெரியும்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...