5 Oct 2024

அடைபட்ட பூதம் ஒரு நாள் விடுதலையாகும்!

அடைபட்ட பூதம் ஒரு நாள் விடுதலையாகும்!

வாங்கி வைத்து நாட்களாகி விட்டன

புத்தகங்கள் அப்படியே இருக்கின்றன

எல்லாவற்றுக்குமான காலம் வரும்

இத்தனை நாள் தொடவில்லை என்ற கோபம் இல்லாமல்

பக்கங்கள் ஒரு நாள் ஒவ்வொன்றாக விரியும்

சீசாவுக்குள் அடைபடும் பூதம் போல்

மொத்த புத்தகங்களும் ரசனைக்குள் அடைபடும்

சீசாவைத் திறந்து விடுவதற்கு

ஓர் அற்புத மந்திரம்

ஒரு புத்தமாக எழுதப்படும்

இப்போது செய்ய வேண்டியது

சீசாவுக்குள் அடைபட்ட பூதத்தை

அலமாரிக் குகையிலிருந்து வெளியே எடுப்பது

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...