அன்பில் சுரக்கும் மனிதம்
அடித்துக்
கொண்டு சாவதற்கில்லை என்றால்
மனிதர்கள்
எதற்காகப் பிறந்தார்கள்
படையெடுப்புகள்
தாக்குதல்கள் குண்டு வெடிப்புகள்
குருஷேத்திரம்
முதலாம் உலகப் போர்
இரண்டாம்
உலகப் போர் சிலுவைப் போர்கள்
ரஷ்யா
உக்ரைன் போர் இஸ்ரேல் பாலஸ்தீனியப் போர்
இன்னும்
எத்தனை எத்தனை போர்கள்
மனிதர்கள்
அடித்துக் கொண்டு சாக
மனிதர்களால்
சாகாமல் இருக்க முடியாதா
அடித்துக்
கொள்ளாமல் இருக்க முடியாதா
சாவார்கள்
பிறப்பார்கள் அடித்துக் கொள்வார்கள்
நிறைய
போர்களைப் பார்ப்பார்கள்
நிறைய
உருவாக்குவார்கள்
அடித்துக்
கொள்ளும் விளையாட்டு
போரில்
புரளும் பொழுதுபோக்கு
ஆசைத்
தீனியின் அற்புத மர்மம்
நல்லவர்கள்
தீயவர்களாகத் தீயவர்கள் நல்லவர்களாக
மாறுவார்கள்
மாறிக் கொண்டே இருப்பார்கள்
கைகோர்ப்புகள்
மாறும்
மாறி
மாறி நடக்கும் சண்டைகள் போர்கள் உக்கிரங்கள்
நீங்கள்
நாங்கள் எல்லாரும் சேர்ந்து பார்த்துக் கொள்வோம்
இப்போது
சேர்ந்திருப்போம் பிரிவுக்காகக் காத்திருப்போம்
இப்போது
பிரிந்திருப்போம் பிரிவுக்காகக் காத்திருப்போம்
அது
அவ்வபோது நடக்கும்
அவ்வபோது
அன்பெனும் முலையிலும் பால் சுரக்கும்
மனிதம்
வற்றிப் போகும் போது மானுடம் பசியாறிக் கொள்ள
*****
No comments:
Post a Comment