கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும்
உண்மை
பொய்
ஏமாற்றம்
நியாயம்
எப்போதும்
வெளியில்
சொல்ல முடியாத
ஒரு
பட்டியல் இருக்கிறது
ஏமாற்றுபவர்கள்
எப்போதும் இருப்பார்கள்
இருந்து
கொண்டே இருப்பார்கள்
உறுதிமொழியைக்
காப்பாற்றாத போது
ஒரு
தற்கொலை நிகழலாம் பிரிதல் நேரிடலாம்
ஏற்றுக்
கொள்ளுதலும் நடக்கலாம்
ஒரு
கதையை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்
வாழ்க்கையை
அப்படி எழுதிக் கொள்ள முடியாது
வாழ்க்கையை
வாழ்ந்தாக வேண்டும்
நீங்கள்தான்
வாழ்ந்தாக வேண்டும்
அந்தக்
கதையை மற்றவர்கள் எழுதுவார்கள்
அவர்கள்
போக்கிற்குச் சொல்வார்கள்
உங்கள்
பங்குக்கு நீங்கள் கொஞ்சம் எழுதலாம்
கூடுதலாக
எழுதுவோரும் எழுதுவார்கள்
உங்களோடு
சம்பந்தம் இல்லாதவர்களும் எழுதுவார்கள்
அது
ஒரு புதிர் அல்லது விடுகதை
ஏன்
வீட்டுப் பூக்களைப் பறிக்க
நீங்கள்
ஏன் கம்பி நீட்டுகிறீர்கள் என்று கேட்க முடியாது
எல்லாரும்
நீட்டுவார்கள்
நீங்களும்
கம்பி நீட்டிக் கொள்ளலாம்
கதை
விட்டுக் கொள்ளலாம்
கதையின்
ஆத்மா மறைந்த பின்
நீங்கள்
இறந்து விடுவீர்கள்
*****
No comments:
Post a Comment