அப்போது பூகம்பம் வரும் போது
இரவைக்
கரைத்துக் கொண்டிருந்த
இரவு
நேரப் பணியில்
இணையத்தை
மேய்ந்து கொண்டிருந்தவர்
ஒரு
ரகசிய வலைதளத்தைக் கண்டறிகிறார்
ஒரு
புதிய தொடர்பு துளிர்க்கிறது
ஏதுமறியாத
அவருடைய இணையர்
அந்த
இரவில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்
என்பது
மறந்து நம்பிக்கையில் தீயை வைத்து
ஒரு
முறை ஏமாற்ற நினைத்து
தொடர்ச்சியாக
ஏமாற்றும் வித்தைக்காரராகிறார்
காலப்போக்கில்
ஏமாற்றுதல்
ரத்தத்தில்
கலக்கிறது இதயத்தை மறக்கிறது
நம்பிக்கை
உடையும் போது
யாரால்
தாங்க முடியும் அதை
ரகசியங்களைக்
காக்க நினைப்பவர்
ஒரு
நாள் அது எப்படியும் வெளியே வந்து விடும்
என்பதை
நம்ப மறுக்கிறார்
உண்மையான
பூகம்பம் ஒரு நாள் வருகிறது
ரகசிய
கட்டடங்கள் ஆட்டம் எடுக்கின்றன
மறைந்திருந்த
பொய்கள் சரிந்து விழுகின்றன
வெளிப்படாத
வேஷங்கள் உதிர்ந்து விழுகின்றன
நிர்வாணத்தை
மறைக்க கைகள் மட்டும் போதாது
பொய்யின்
ஆடைகள் நார் நாராய் கிழிந்து
தொங்கும்
போது
உங்களுக்கு
உடுத்திக் கொள்ள உடை ஏது
*****
No comments:
Post a Comment