சாட்ஜிபியிடம்
50 முறை கேள்வி கேட்டுப் பதில் வாங்கினால் ஒரு லிட்டர் தண்ணீர் காலியாகிறது என்கிறார்கள்.
ஒரு லிட்டர் தண்ணீர் இருபது ரூபாய்!
அதெப்படி
கேள்வி கேட்டு பதில் வாங்கினால் தண்ணீர் காலியாகும்? அதென்ன தொண்டை தண்ணீர் வற்றவா
பதில் சொல்கிறது என்றால், சாட்ஜிபிடி செயலாக்கிகள் அதற்கான மென்பொருள் மற்றும் சில்லுகளைக்
கொண்டு இயங்கும் போது கரியமில வாயு உற்பத்தி ஆகிறது.
அத்துடன்
வெப்பமும் உண்டாகிறது. அந்த வெப்பத்தைத் தணிக்க வேண்டுமே. அதற்கான பிரமாண்ட குளிரூட்டும்
வசதிகள் தேவைப்படுகிறது.
அதற்குதான்
இந்தத் தண்ணீர்.
50 கேள்விகளுக்கு
ஒரு லிட்டர் தண்ணீர் என்றால் 500 கேள்விகளுக்குப் பதில் சொல்ல 10 லிட்டர் தண்ணீர்.
கேள்விகள் 50, 500 என்றா நிற்கப் போகிறது? லட்சம், கோடியைத் தாண்டி பில்லியன், டிரில்லியனில்
போய்க் கொண்டிருக்கிறது.
அப்படியானால்
ஒவ்வொரு நாளும் எத்தனை லிட்டர் தண்ணீரை சாட்ஜிபிடி குடித்துக் கொண்டிருக்கிறது என்பதைக்
கணக்கிட்டுப் பாருங்கள். இப்படி செயற்கை நுண்ணறிவு தளங்கள் தண்ணீரைக் குடித்துக் கொண்டிருந்தால்
மனிதர்கள் குடிக்கும் தண்ணீருக்குத் தட்டுபாடு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தி லாஸ்ட்
சர்வைவர்ஸ் என்ற திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? தண்ணீருக்காக மனிதர்கள் எப்படி
அடித்துக் கொண்டு சாகிறார்கள் என்பதை அந்தத் திரைப்படத்தில் நீங்கள் பார்க்கலாம்.
என்னதான்
செய்வது? என்று இதையே ஒரு கேள்வியாக்கி சாட்ஜிடியிடம் கேட்டு வைக்கலாம். அது ஒரு வழி.
மற்றொரு வழியும் இருக்கிறது.
ஏன்?
எதற்கு? எப்படி? என்ற கேள்வி கேட்காமல் அறிவியல் இல்லை. கேள்விகளை நாம் மனிதர்களிடமும்
புத்தகங்களிடமும் அதிகம் கேட்டுக் கொண்டு செயற்கை நுண்ணறிவு தளங்களில் கேட்பதைக் குறைத்துக்
கொள்ளலாம். அப்படி குறைத்துக் கொண்டால் அறிவும் நிறைவாகும், நீர் வளமும் காக்கப்படும்.
உங்களுக்குச்
சந்தேகமாக இருந்தால் இதையே சாட்ஜிபிடியிடம் கேட்டுப் பாருங்களேன். அதாவது உன்னிடம்
50 கேள்விகள் கேட்டால் நீ ஒரு லிட்டர் தண்ணீரைக் காலி செய்வாயா என்று.
No comments:
Post a Comment