6 Jun 2024

கால திருஷ்டிகள்

கால திருஷ்டிகள்

உன் மீது சிறுநீர் கழிப்பேன்

சிறுநீர் மட்டுமா

மலமே கூட கழிப்பேன்

அதனாலென்ன

ஒரு பாத பூஜை செய்தால்

எல்லா பாவங்களும் கழுவப்பட்டு விடும்

 

சந்திராயன்

சிங்கிளா போகுது

அன்ரிசவர்ட் கம்பார்ட்மென்ட்

ஊரையே அள்ளிக் கொண்டு போகுது

 

விளையாடி விளையாடி

சம்பாதிக்கும் முதல் பத்து பணக்காரர்களில்

ஒரு மட்டைப்பந்தாட்டக்காரனும் இல்லை என்பது

அதெல்லாம் ஒரு விளையாட்டா என்று

கேள்வி கேட்பது போல இருக்கிறது

 

ஓடி என்ன பிரயோஜனம்

நின்று விட்ட கடிகாரமும்

ஒரு நாளில் இரண்டு முறை சரியான நேரம் காட்டுகிறது

 

இப்போதைக்கு இது போதும் என்று

நிறுத்திக் கொள்ளவா முடிகிறது

காலம் விதவிதமான கொடுமைகளைக் காட்ட

காத்துக் கொண்டிருக்கிறது

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...