7 Jun 2024

இப்போதும் எப்போதும் டெங்கு!

 


இந்தக் கோடையில் வெயிலடித்தால் வியர்வை தொல்லை தாங்க முடியவில்லை. சரிதான் மழை பெய்தால் தேவலாம் என்றால், இப்போது கொசு தொல்லை தாங்க முடியவில்லை. இந்தக்  கோடை மழைக்கே டெங்குக் காய்ச்சல் பரவுகிறது என்றால் என்னவென்று சொல்வது?

 

All in all Online Training!

எதற்குத்தான் நாட்டில் இணைய வழி பயிற்சி என்பதற்குக் கணக்கில்லாமல் போய் விட்டது. அலைபேசியைப் பார்த்துக் கொண்டே வண்டி ஓட்டுகிறாயே என்றால், இணைய வழியில் ஓட்டுநர் பயிற்சி பெறுவதாகச் சொல்பவரை என்ன சொல்வது?

 

காசு பணம் துட்டு!

காசு, பணம், துட்டு எல்லாம் சந்தோசம் தராது, நிம்மதி தராது என்று சொல்லும் பலரைப் பார்க்கிறேன்? அதெல்லாம் நிம்மதி தராது என்றால் அதை ஏன் சம்பாதிக்கிறீர்கள்? அதெல்லாம் சொல்வதற்காகச் சொல்வது. அதெல்லாம் சந்தோசம் தராது என்று சொல்பவர்களுக்கு அதுவே சந்தோசம். அதெல்லாம் நிம்மதி தராது என்று சொல்பவர்களுக்கு அதுவே நிம்மதி. அவர்களை ஒரு நாள் சம்பாதிக்காமல் இருந்து பார் என்று சொல்லுங்கள். அவர்களின் சந்தோசம் போய் விடும். அவர்களின் நிம்மதி போய் விடும்.

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...