இந்தப்
பொன்மொழி எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, சாப்பாட்டிற்குப் பொருந்தும். ஒரு பண்டம்
நன்றாக இருக்கிறதோ, நன்றாக இல்லையோ அதை அன்றே சாப்பிட்டு விடுங்கள். அல்லது பசித்தவர்களுக்குக்
கொடுத்து விடுங்கள். அதற்கும் வாய்ப்பில்லையென்றால் குப்பைத் தொட்டியில் கடாசி விடுங்கள்.
இல்லையென்றால் அது குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டு அடுத்தடுத்த நாட்கள் பரிமாறப்படும்.
பரிமாறப்பட்டுக் கொண்டே இருக்கும்.
இப்படி
குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் வற்றல் குழம்பை பல மாத கால அளவு சாப்பிடும்
தலைமுறைகள் உருவாகி விட்டார்கள். சட்டினியைச் சட்டென்று சாப்பிட்டு முடிக்காமல் சில
பல நாட்கள் பதனப் பெட்டியில் வைத்துச் சாப்பிடும் பட்டாளங்கள் கிளம்பி விட்டார்கள்.
வெந்ததைத்
தின்று விதி வந்தால் சாவோம் என்ற வேதாந்தம் வீணாகி, மீந்ததைத் தின்று மிச்சம் உள்ள
காலம் வாழ்வோம் என்ற சித்தாந்தம் வலு பெற்று விட்டது. இதனால் ஒன்றே செய், நன்றே செய்,
இன்றே செய் என்ற பழமொழி சாப்பாட்டிற்கு அவ்வளவு பொருந்திப் போகிறது.
No comments:
Post a Comment