5 Jun 2024

அளவைப் புரிதல்

 


அளவு அதுதான் எல்லாம்

அளவான வேகம் எந்தப் பிரச்சனையும் தராது

அளவை மீறாமல் இருப்பது சிக்கல் தராது

அளவு ஓர் அழகு

அளவு ஓர் ஆனந்தம்

அளவோடு வாழ்வது அளவிட முடியாத நன்மை

ஆசை அளவை மீறச் செய்யும்

அளவை மீறுவது குதுகலிப்பாக இருக்கலாம்

அளவு பாதுகாப்பானது

அளவு குழப்பமில்லாதது

அளவை மிஞ்சாதிருப்பது சாதாரணமாகத் தெரியலாம்

அது அசாதாரணமானது

சிக்குவதும் மூழ்குவதும் இழப்பதும்

அளவை மிஞ்சுவதன் அடையாளம்

அளவைப் புரிந்துகொள்ளும் போது

வாழ்க்கை புரிந்து விடுகிறது

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...