4 Jun 2024

நிற்காது கால சக்கரம்

 


என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது

தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் போது

கொஞ்சம் கொஞ்சமாகப் புலப்படும்

புலப்படுவதை வைத்து

இதுதான் என்று நிச்சயம் பண்ண முடியாது

முழுதும் நடந்து முடிந்தால்

என்னவென்று தெரிந்து விடப் போகிறது

அதற்கு ஏன் கருத்து கேட்கிறீர்கள்

ஏன் கணிக்கச் சொல்கிறீர்கள்

காலத்தைக் கடந்து கொண்டு இருங்கள்

புலப்பட்டு விடும்

கேட்க நினைக்கும்

அத்தனைக் கேள்விகளுக்குமான பதில்களை

காதுகளால் கேட்பது முக்கியமல்ல

கண்ணெதிரே பார்க்கலாம்

நொடிகளில் ஏறி பயணிப்பதை

விரும்பாமல் இருக்கலாம்

பயணிக்காமல் இருக்க முடியாது

பயணித்துக் கொண்டிருப்பீர்கள்

மனதை இறுக்கிப் பிடித்துக் கொள்வதால்

கால சக்கரங்கள் நின்று விடாது

No comments:

Post a Comment

சங்கடத்தின் பின்னுள்ள காரணங்கள்

சங்கடத்தின் பின்னுள்ள காரணங்கள் எவ்வளவோ விளக்கங்கள் எத்தனையோ தத்துவங்கள் எண்ணிச் சொல்ல முடியாது அவ்வளவு ஆறுதல்கள் அத்தனை அழுகைகள் ...