2 Jun 2024

காற்றில் கரைதல்

கூரைகள் காற்றில் பறந்து கொண்டிருக்கின்றன

சம்சாரப் பந்தத்தில் சிக்கிய

சந்நியாசி பலகாரம் சுட்டுக் கொண்டிருக்கிறார்

சட்டத்திற்குட்பட்ட சிகிச்சைகள்

எங்கும் வலிகள்

மருத்துவமனையில் சுகமா தருவார்கள்

அதிகாரப்பூர்வ கத்திகள்

அறுத்துக் கொண்டிருக்கின்றன

தேவையில்லாத உறுப்புகள்

துண்டிக்கப்படுகின்றன

சில உயிர்கள் பறிபோகின்றன

என்ன செய்ய முடியும்

எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டவை

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...