1 Jun 2024

டாஸ்மாக்கைக் கும்பிடும் ஒருவர்

வேப்ப மரத்தடியைக் கடக்கும் போதெல்லாம்

தலையைத் தாழ்த்தி

ஒரு கையை மார்புக்கு நேராகக் கொண்டு வந்து

இரு சக்கர வாகனத்தில் பயணத்தபடியே

மனசுக்குள் கும்பிடு போட்டுக் கொள்வது

பல கால பழக்கம்

ஒரு புயல் மழையில்

 வேப்ப மரம் விழுந்து

அங்கே ஒரு டாஸ்மாக் எழுந்து

இப்போதும் கும்பிடு போடும் மனசும்

கவியும் தலையும்

நெஞ்சருகே செல்லும் கரமும்

அப்படியே இருக்கின்றன

டாஸ்மாக்கைக் கும்பிட்டுச் செல்பவரை

அதிசயமாகப் பார்க்கும்

அநேகம் பேர்

மனசுக்குள் திட்டித் தீர்த்துக் கொள்ளக் கூடும்

என்றாவது ஒரு நாள்

டாஸ்மாக் ஓரம் ஒருவேப்பங்கன்று

முளைக்காமலா போய் விடும்

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...