9 Jun 2024

ஓர் ஏமாற்றத்திற்குப் பின்…

 


பூட்டிப் பார்த்து விட்டு இழுக்கும் போது

கையோடு வந்து விட்டால்

என்ன செய்யப் போகிறோம்

அந்தப் பூட்டை

நம்பிக்கை உடைந்ததற்காக

தூக்கி எறிவோம்

பழுது பார்க்கவும் செய்யலாம்

வேறொரு பூட்டை வாங்கி வரலாம்

புதுப்பூட்டு என்பதற்காக

இழுத்துப் பார்க்காமல் இருந்து விடுவோமா

பழைய பூட்டின் ஞாபகம்

இரு முறை இழுத்துப் பார்க்கச் செய்யும்

No comments:

Post a Comment

கிராமங்கள் கிராமங்களாகத்தான் இருக்கின்றனவா?

கிராமங்கள் கிராமங்களாகத்தான் இருக்கின்றனவா? ஒரு சில கிராமங்கள் இன்றும் கிராமங்களாக இருக்கலாம். நாம் பெரும்பான்மையைப் பற்றிப் பேச வேண்டியிர...