7 Jun 2024

பதற்றமின்றிப் பறக்கும் பட்டாம்பூச்சி

 


இன்று என்னவாகும்

நாளை என்னவாகும்

கணித்துக் கொண்டு இருக்க முடியாது

கணிப்புகள் தவறாகும்

தவறாகும் போது நெஞ்சு அடைக்கும்

மார்பு வலிக்கும்

நரம்புகள் தெறிக்கும்

மண்டை வெடிக்கும்

இதயம் சுக்கு நூறாகும்

கனிவதற்கு முன்

கணிப்புகள் வேண்டாம்

பூகம்பத்தால் குலுங்கிய

பூமியின் மேல்

பதற்றமின்றி பறக்கிறது

பட்டாம்பூச்சி

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...