3 Mar 2024

ஜாதகத்தில் எழுதப்படாதது!

நைனாமலையின் கண்டுபிடிப்பு!

இப்படியும் நடக்குமா?

நைனாமலையின் அலைபேசி கீழே விழுந்தது.

39 சதவீதமாக இருந்த மின்கல சேமிப்பு 89 சதவீதமானது.

அதிலிருந்து அலைபேசியின் மின்கல சேமிப்பு இருப்பு குறைந்த போதெல்லாம் கீழே போட்டுப் போட்டுப் பார்த்தான் நைனாமலை.

அலைபேசியின் திரை விரிசல் கண்டு, ஆங்காங்கே உடைந்து, முடிவில் அலைபேசி சின்னபின்னமானது.

*****

ஜாதகத்தில் எழுதப்படாதது!

உன் பெயரில் ஒரு கடன் எடுத்துக் கொடு. நான் கட்டிக் கொள்கிறேன் என்றான் தேனப்பன்.

சரிதான் இப்படி உதவிப் பார்ப்போமே என்ற எண்ணமா? திடீரென தோன்றிய பச்சதாபமா? குணசேகரன் செய்து விட்டான்.

ஒரு நாள் தேனப்பன் மாரடைப்பு கண்டு இறந்து போவான் என்றோ, அந்தக் கடனைக் குணசேகரன்தான் கட்டி அடைக்கப் போகிறான் என்றோ அவன் ஜாதகத்தில் எழுதப்படாமல் இருந்தது.

*****

நானூறு நாற்காலி செலவு!

கடையில் ஒரு நாற்காலிக்கு இரண்டு நாற்காலிகள் விலை சொல்கிறானப்பா. இதோ பார், தெருவில் பாதி விலைக்கு விற்றுப் போகிறான். நாகப்பன் நான்கு நாற்காலிகளை வாங்கிப் போட்டான்.

நான்காவது மாதம் நாற்காலியின் ஒரு கால் ஒடிந்து விழுந்ததில் இடிப்பொடிந்து மருத்துவமனையில் கிடக்கிறான் நாகப்பன்.

பார்ப்போரிடம் எல்லாம் ஒரு தரமற்ற நாற்காலி வாங்கியதற்கு நானூறு நாற்காலிகளின் விலைக்குச் செலவு ஆகி விட்டதாகப் புலம்பிக் கொண்டிருக்கிறான்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...