2 Mar 2024

தமிழன் என்றோர் இனமுண்டு! பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் குணமுண்டு!

தமிழன் என்றோர் இனமுண்டு! பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் குணமுண்டு!

எப்போது தமிழன் என்று சொல்வது?

தலைநிமிர்ந்து நிற்பது?

திரைப்படம் பார்த்து வாக்கைக் குத்தும் மூதேவிகள் இருக்கும் வரை.

 

தமிழன் என்றோர் இனமுண்டு

தனியே அவர்க்கோர் குணமுண்டு

என்று எப்போது சொல்வது?

ஐநூறு ரூபாய் நோட்டை வாங்கிக் கொண்டு

ஓட்டைப் போடும் ஓடுகாலிகள் இருக்கும் வரை.

 

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே

முன்தோன்றிய மூத்தகுடி என்று

எப்போது பெருமைபட்டுக் கொள்வது?

இலவசப் பொருட்களுக்கு வாயைப் பிளந்து கொண்டு

வாக்குப்பதிவு செய்யும் இரண்டுகெட்டான்கள் இருக்கும் வரை.

****

ஊருக்கு ஊர் ரசிகர் மன்றங்கள் வைத்திருக்கிறார்கள். என்ன ஊர்டா இது? ரசிகர் மன்றங்கள் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது என்று முடிவே கட்டி விட்டான்கள் போல இருக்கிறது.

ரசிகர் மன்றங்கள் வைத்திருக்கும் இளைஞர்கள் ஒரு படிப்பகத்தை அமைக்கக் கூடாதா? மாணவர்களுக்கு, வேலை தேடும் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கும் மையங்களை அமைக்கக் கூடாதா? விவாத மன்றங்களை அமைக்கக் கூடாதா? தொழில் தொடங்கும் கூட்டமைப்புகளை உருவாக்கக் கூடாதா? வழிகாட்டும் மையங்களை அமைக்கக் கூடாதா? ஆலோசனைகள் வழங்கும் மையங்களை அமைக்கக் கூடாதா? அப்படியெல்லாம் செய்து விட்டால் இந்த இளைஞர்கள் அறிவார்ந்த தலைவர்களுக்கு அல்லவா ஓட்டு போடுவார்கள். ஆகவே அப்படி நிகழ்ந்து விடக் கூடாது. அப்படி நிகழ்ந்து விடாமல் தடுக்க வேண்டும். அதற்கேற்றாற் போல திரைப்படங்களையும், தொலைக்காட்சி அலைவரிசைகளையும் உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டே உருவாக்குகின்றனர். இளைஞர்களும் டாஸ்மாக்கை நோக்கிப் போவதை விட மிக மோசமாக ரசிகர் மன்றங்களை நோக்கிப் போகின்றனர்? டாஸ்மாக்குக்குப் போனவனும் ரசிகர் மன்றத்துக்குப் போனவனும் எந்தக் காலத்தில் உருப்பட்டிருக்கிறான்?

***

திரையரங்கிற்கு வரவில்லை என்றால் எப்படி?

எல்லா படங்களும் யூடியூப்பில் கொட்டிக் கிடக்கின்றன.

அது போதாது என்றால் நெட்பிளிக்ஸ், அமேசான் என்று எவ்வளவோ இருக்கிறது.

வீட்டில் கணினி, தட்டைத் தொலைக்காட்சி, அதிநவீன தொலைக்காட்சி, சிறப்பு சப்த அமைப்புகள் என்று ஏராளம்.

திரையரங்கங்களோ இப்போது பெட்டி பெட்டியாக வீட்டு அறைகளைப் போலத்தான் இருக்கின்றன. ஒரு வீட்டை ஒன்பதாகத் தடுத்து வாடகைக்கு விடுவதைப் போல ஒரு திரையரங்கை நான்கு திரையரங்குகளாக ஆக்கி படம் பார்க்க விடுகிறார்கள். இந்தத் திரையரங்கங்களுக்கு முன்பதிவு செய்து, இரு சக்கர வாகனம் போட ஒரு கட்டணம் கட்டி, சோளப்பொறி வாங்க இரண்டு மடங்கு செலவு செய்து, பனிக்கூழ் வாங்க நான்கு மடங்கு செலவு செய்து மொத்தத்தில் ஒரு படம் பார்க்க ஆயிரத்தைக் கரியாக்குவதற்கு பையில் இருக்கும் அலைபேசியை எடுத்து தட்டி விட்டால் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு குளிர்சாதன அறையில் படம் பார்ப்பதைப் போல என்னமாகப் படம் பார்க்க முடிகிறது? இடைவேளையை விருப்பம் போல எடுத்துக் கொண்டு ஒதுக்குப்புறத்தில் என்ன சுகமாக ஒன்றுக்க அடிக்க முடிகிறது.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...