3 Feb 2024

தமிழ் கழக அகராதி!

தமிழ் கழக அகராதி!

தமிழ்நாட்டில் நிறைய கழகங்கள்

திராவிடர் கழகம்

திராவிட முன்னேற்றக் கழகம்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

கட்சிகளும் உண்டு

சமத்துவ மக்கள் கட்சி

நாம் தமிழர் கட்சி

விடுதலை சிறுத்தைகள் கட்சி

புதிய தமிழகம் கட்சி

பாட்டாளி மக்கள் கட்சி

மார்க்சிஸ்ட் கட்சி

கம்யூனிஸ்ட் கட்சி

ஜனதா கட்சி

பாரதிய ஜனதா கட்சி

காங்கிரஸ் கட்சி

மையமும் ஒன்று உண்டு

மக்கள் நீதி மையம்

இப்போது புதிதாக இன்னொரு கழகம்

தளபதி விஜய்யின்

தமிழக வெற்றிக் கழகம்

வடசென்னை தென்குமரி ஆயிடை

தமிழ் கூறு நல்லுலகத்துத்

தலைவர்கள் எங்கிருந்தும் வருவார்கள்

சினிமாவிலிருந்தும் வருவார்கள்

கழகங்களை உருவாக்குவார்கள்

தலைவராகவும் கட்சி ஆரம்பிக்கவும்

சினிமாவில் இருப்பது நல்லது

கட்சியில் இருக்கவும் தொண்டராகவும்

சினிமா பார்ப்பது நல்லது

டிரெய்லருக்கே தியேட்டரைத் தெறிக்க விடுபவர்கள்

முழு படத்துக்குத் தமிழ்நாட்டையே தெறிக்க விடுவார்கள்

ஆட்டத்தில் கப்பு முக்கியம் பிகிலு

ஓட்டுக்கு டப்பு முக்கியம் மக்களே

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...