1 Aug 2023

முடிவில்லா வார்ப்பு சுழற்சி

முடிவில்லா வார்ப்பு சுழற்சி

யார் வீட்டு நாய் அந்தக் கருப்பு நாய்

பின்முதுகில் பொட்டென்று போடொன்று போட்டது

வழிபோக்கர் ஒருவருடன் பேசிக் கொண்டு போனதில்

பின்னால் வரும் நாயை முன்னால் இருக்கும் கண்கள்

கவனிக்கவில்லை என்று சொல்வதா

கண்கள் முன்னால் இருப்பதால் பின்னால் வருவதைக்

கவனிக்கவில்லை என்று சொல்வதா

சாலையில் இப்படியா கவனமில்லாமல் போவதென்று

காலில் கொஞ்சம் பிராண்டலையும்

செய்து வைத்தது என்று சொல்வதா

இப்படியா ஒரு வீட்டுநாய் செய்யும்

தெருவில் போவோர் வருவோரைப் பார்த்து குரைக்க

கை காலை லாவ

வேடிக்கைப் பார்த்தபடி பால்கனியில் அமர்ந்திருப்பது

நாய் வளர்ப்போர் பண்ணும் உபகாரம் என்பதா

மாடி வீட்டுக்காரரின் நாய் யாரைப் பார்த்தாலும் துரத்தும்

அவர் வீட்டு ஆசாமிகளைத் தவிர கடித்தும் வைக்கும்

மாடி வீட்டுக்காரரின் நாய் ஒரு நாள்

கருவக்காட்டில் உயிரற்றுத் தொங்கிக் கொண்டிருந்து

நாட்டாமைக்காரர் வீட்டு நாய்

விஷத்தைத் தின்று மரித்திருந்தது

என்னைப் பிராண்டிய நாய்க்கும்

இன்னம் சில நாட்களில் இப்படி ஏதேனும் நடக்கலாம்

வீட்டுக்காரர் இன்னொரு நாய் வளர்க்க தயாராகலாம்

வீட்டு நாய்கள் மனித நாய்கள் உட்பட

எஜமான விசுவாசத்தை எப்படியும் காட்டும்

வாழ்க்கை சுழற்சிக்கு முடிவேது

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...