18 Jul 2023

சின்ன சின்ன கதைகள்

சின்ன சின்ன கதைகள்

வங்கி நேரம் முடிந்திருந்தது.

அப்ரைசர் ரவி வேகமாக நடந்தான் அடகுக் கடையை நோக்கி.

***

வானத்தை நோக்கிச் சுட்டது எப்படி என்கௌண்டரானது என்று புரியாமல் திகைத்து நின்றார் ஏட்டு ஏகாம்பரம்.

***

பத்து பழைய பித்தளை பாத்திரங்களைப் போட்டு விட்டு நான்கு எவர்சில்வர் பாத்திரங்களை வாங்கிக் கொண்டாள் ஷிவானி.

***

பிக்சட் டெபாசிட்டுக்கு 0.25 சதவீதம் ஏற்றியிருக்கிறார்கள் என்றதும் உதட்டைப் பிதுக்கிக் கொண்டாள் ஐந்து பைசா வட்டிக்காரி எனப் பெயர் எடுத்திருந்த அம்சவள்ளி அக்கா.

***

ஆன்லைன்ல ஆர்டர் போட்டது அச்சு அசலா உங்க கடை பிரியாணி போல இருந்துச்சு பாய் என்றான் குருநாத் சோமசுந்தரம். ஆமாம் தம்பி ஒரு நாளைக்கு ஐயாயிரம் ஆன்லைன் ஆர்டருக்குச் சப்ளை பண்றேன் என்றார் பாய் பீர் முகம்மது.

***

அமெரிக்காவில் என்ன வாங்கி வரட்டும் என்றான் நிஷாந்த்.

எக்ஸ்போர்ட்டட் திருப்பூர் டர்க்கி டவல் ரெண்டு என்றாள் சுஷ்மி.

***

டிஷ் வாஷர் வாங்கிய நாளிலிருந்து ஹோட்டல் சாப்பாடாகப் போய்க் கொண்டிருக்கிறது ஆனந்துக்கும் ஆர்த்திக்கும்.

***

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...