17 Jul 2023

சம்சாரியின் சகல பரிபாத்தியங்கள்

சம்சாரியின் சகல பரிபாத்தியங்கள்

கன்னத்தில் போட்டுக் கொள்

விபூதி பூசிக் கொள்

நாமத்தை இட்டுக் கொள்

நூலைக் கழற்றி விடாதே

தீட்டானால் விலகி இரு

உச்சாடனம் செய்யாது உள்ளே விடாதே

அடக்க முடியாத போது

பரிகாரம் பண்ணிக் கொள்

வீட்டோடு இருப்பவருக்கு

வீட்டில் இருப்பவையோடு

ஆயிரத்தெட்டு உண்டு

மீறவும் முடியாது

மீறாமலும் முடியாது

சந்தர்ப்பங்களைச் சமாளித்துக் கொண்டு

சடங்குகளைத் தொடர வேண்டும்

அடையாளங்கள் அழியாமல்

அச்சு அசலாய் வாழ வேண்டும்

நகலெடுத்த பிரதியில் மாற்றங்களும் கூடாது

எப்போது வேண்டுமானாலும்

எதுவும் உதிரலாம்

உதிர்வதற்கு முன் உதிர்த்தல் ஆகாது

உதிரும் காலம் வரும் வரை

உதிர்க்காமல் சுமப்பதில் நிற்கிறார் சம்சாரி

*****

No comments:

Post a Comment

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்!

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்! அண்மைக் காலத்தில் எக்ஸ் தளத்தில் பரபரப்பான இரண்டு சொல்லாடல்கள் ‘திரும்பிப் போ’ என்பத...