15 Jul 2023

கனவுகள் உடையும் காலம்

கனவுகள் உடையும் காலம்

மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும்

ஷங்கர் படத்தில் நடிக்க வேண்டும்

லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க வேண்டும்

நிறைய கனவுகள் இருக்கின்றன

மனைவி முன் நடிக்க வேண்டுமே என்ற எதார்த்தம்

எல்லா கனவுகளையும் போட்டுத் தள்ளி விடுகிறது

*

ஒரு காலத்தில்

பரீட்சையில் பாஸ் ஆனாலே வேலை கிடைக்கும்

இன்னொரு காலத்தில்

தகுதித்தேர்வில் செலக்ட் ஆனத்தான் வேலை கிடைக்கும்

மற்றுமொரு காலத்தில்

வெயிட்டேஜ் இல்லையென்றால் அதுவும் கிடைக்காது

*

ஏடிஎம்மின் வடிவமைப்பு

அதாவது டிசைன் என்பது

இப்படித்தான் இருக்கிறதா?

கல்லைக் கண்டால் நாயைக் காணும்

நாயைக் கண்டால் கல்லைக் காணும் என்பது போல

ஏடிஎம்மில் பணம் இல்லாத போது

அக்கௌண்டில் பணம் இருக்கிறது

அக்கௌண்டில் பணம் இருக்கும் போது

ஏடிஎம்மில் பணமில்லை

*

இது சாம்பார்

இது குழம்பு

இது ரசம்

இது பொரியல்

இது கூட்டு

பிரித்துக் காட்டிச் சொல்வதில் இருக்கிறது

மனைவியின் சமத்து

*

சிறு வயதில் ரசித்து ரசித்துப் பார்த்தப் படங்களை

இப்போது ரசிக்க முடிவதில்லை

அட கொடுமையே என்று

அப்போது தொலைக்காட்சி இருப்பதற்காகப் பார்த்த படங்கள்

இப்போது ரசித்து ரசித்து…

என்னவோ செய்கின்றன

*

பள்ளி நாட்களில் தினம் தினம் வழிபாட்டுக் கூட்டத்தில்

உறுதிமொழி எடுத்துக் கொண்டது ஞாபகம் வருகிறது

இப்போது புத்தாண்டுகளில்

உறுதிமொழி எடுத்துக் கொள்வதோடு சரி

*

கோஷ்டி சண்டை என்றால்

ஆயிரம் பேர் வரை கூடும் கட்சியில்

ஆர்பாட்டம் என்றால் ஒருவர் கூட வருவதில்லை

இந்தியா பல வகைக் கட்சிகளின் அருங்காட்சியகம்.

*

படத்தை எடுத்தால் போதும்

எடிட்டிங்கைச் சென்சார் போர்டில் பார்த்துக் கொள்கிறார்கள்

என்கிறார் எடிட்டிங் செலவை

தயாரிப்பாளருக்கு மிச்சம் செய்து கொடுக்கும் இயக்குநர்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...