14 Jul 2023

கடவுள் சகித்துக் கொள்வார் மற்றும் தேவதைகள் முத்தமிடும் பொழுதுகள்

கடவுள் சகித்துக் கொள்வார் மற்றும் தேவதைகள் முத்தமிடும் பொழுதுகள்

கடவுளை வழிபடுவதைப் பார்த்து

சாத்தானுக்குக் கோபமிருக்காதா

தேவதைகளைக் கொண்டாடுவதைப் பார்த்து

பிசாசுகளுக்கு வருத்தமிருக்காதா

சாத்தானைக் கேட்டால்

கோயிலுக்குள் இடமில்லாத எனக்கு

மனதுக்குள் இடம் கொடுத்திருக்கிறீர்களே

அது போதாதா என்கிறது

பிசாசைக் கேட்டால்

தேவதைகளைக் கொண்டாடி விட்டு

பொறாமையிலும் வஞ்சகத்திலும்

என்னைத் தழுவிக் கொள்கிறீர்களே

அதை விட வேறென்ன வேண்டும் என்கிறது

மனிதர்கள் யாரையும் கைவிடவில்லை எனும் போது

இப்போது

கடவுளுக்கும் கொஞ்சம் சந்தோசம்

தேவதைகளுக்கும் கொஞ்சம் ஆறுதல்

அப்போது

சாத்தான்களைச் சுமந்து

கோயிலுக்கு வரும் நெஞ்சங்களை

கடவுளால் தாங்கிக் கொள்ளவும் முடிகிறது

பிசாசுகளைத் தழுவி வரும் கரங்களை

தேவதைகளால் முத்தமிடவும் முடிகிறது

மற்றும் அப்போது

சாத்தான்களின் கோபம் தணிகின்றன

பிசாசுகளின் வருத்தங்கள் தீர்கின்றன

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...