13 Jul 2023

பொன்னியம்மன் பார்த்துக் கொள்வாள்

பொன்னியம்மன் பார்த்துக் கொள்வாள்

பத்து பைசா இல்லாமல் போனாலும்

பொன்னியம்மன் பார்த்துக் கொள்வாள்

கை நிறைய பூக்களோடு போனாலும்

பொன்னியம்மன் பார்த்துக் கொள்வாள்

பை நிறைய உபயங்களோடு போனாலும்

பொன்னியம்மன் பார்த்துக் கொள்வாள்

பத்து பேர் பசியாற்றி விட்டுப் போனாலும்

பொன்னியம்மன் பார்த்துக் கொள்வாள்

ஓர் உயிரை எடுத்து விட்டுப் போனாலும்

பொன்னியம்மன் பார்த்துக் கொள்வாள்

பொட்டிட்டு மஞ்சள் ஆடை சகிதம் போனாலும்

பொன்னியம்மன் பார்த்துக் கொள்வாள்

குடித்து விட்டு தள்ளாடிக் கொண்டு போனாலும்

பொன்னியம்மன் பார்த்துக் கொள்வாள்

எப்போதும் எங்கேயும் எல்லாவற்றையும்

பொன்னியம்மன் பார்த்துக் கொள்வாள்

ஆலயக் காசை ஆட்டையைப் போட்ட

அந்தியூரானை வாதம் பிடித்து இழுக்க

அவனைக் கட்டியவளைத் தீர்க்க சுமங்கலியாய்

பொன்னியம்மன் பார்த்துக் கொள்வாள்

ஆலயத் திருப்பணியில் மயங்கி விழுந்து உயிர் பிரிந்த

ஐயனாரப்பன் மகள் மூளியாய் ஊர் திரும்ப

பொன்னியம்மன் பார்த்துக் கொள்வாள்

எல்லாவற்றையும் பொன்னியம்மன் பார்த்துக் கொள்வாள் என்று

பொன்னியம்மனைப் பார்த்துக் கொண்டு வாழ்வது ஐதீகம்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...