12 Jul 2023

சத்தங்கள் அடங்கும் பெருவெளி

சத்தங்கள் அடங்கும் பெருவெளி

இவ்வளவுதானா என்றார்கள்

இதற்குதானா என்றார்கள்

ஒன்றுமில்லையே என்றார்கள்

அடச் சீ இதற்குப் போயா என்றார்கள்

பதிலேதும் வராததைப் பார்த்து

அவ்வளவுதானா என்றார்கள்

அப்பால் அதற்கு மேல் என்றார்கள்

ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்றார்கள்

நமக்கும் மேல் என்றார்கள்

இப்போதும் பதிலேதும் வராததைப் பார்த்து

கடவுளா

தெய்வமா

மகா மாயையா

சூன்யமா

பெரு வெளியோ

பெரு வெடிப்போ என்றார்கள்

ஆடி அடங்கினால்

போய் படுத்துக் கொள் என்றேன்

அதற்குப் பின் சத்தங்கள் ஏதும் வரவில்லை

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...